ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் மற்றும் இராமலிங்கம் பவுண்டேசன் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை ஒன்றில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இம்மாதம் 31ஆம் திகதி குதூகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கல்லூரியின் அதிபர் திருமதி சுனித்ரா சூரியராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் ஆரம்ப கல்வி உதவிக்கல்விப்பணிபாபாளர் திரு முரளிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக இரட்ணம் பவுண்டேசன் சார்பில் ஓய்வுபெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் திரு.சு. கிருஷ்ணகுமார் அவர்களும் கலந்து விழாவை சிறப்புற வைத்தனர்.
ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவ மாணவிகள் திறன் பலகையில் தமது பாடங்களை நிகழ்த்திய பாங்கு நிகழ்வில் பங்கேற்றவர்களை ஈர்த்ததை காணமுடிந்தது.ஆசிரியர் ஒருவரும் திறன் பலகையை தம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்நிகழ்வில் செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.

உதவியளித்திருந்த அமைப்புக்களுக்கு அதிபர் உட்பட விருந்தினர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் திறன் பலகையை தம் கற்றல் கற்பித்தல் செயற்படுத்தும் ஆசிரியர்களுக்கான உபாயங்களும் வழங்கப்பட்டன.அத்துடன் மாணவர்கள் தமது ஆராய்வூக்கம் மற்றும் ஆக்குதிறன் முயற்சிகளுக்காக எவ்வாறு திறன் பலகையை பயன் படுத்தி சிறப்பாக துலங்கலாம் என்பது பற்றிய அறிவுரைகளும் விருந்தினர்களால் மாணவர்களால் வழங்கப்பட்டு ஆசிரியர் ஒருவரது நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது.
























