Royal LePage – Ignite and Unite Brokerage
நிறுவனத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் விழா
ஸ்காபுறோவில் வெற்றிகரமாக இயங்கிவரும் Royal LePage – Ignite and Unite Brokerage நிறுவனத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் விழா கடந்த 18-12-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கலந்து கொண்ட நிறுவனத்தின் தலைவர் சுகன் சிவராஜர மற்றும் அவரது சகோதரர்களான வீடு விற்பனை முகவர்கள் திருவாளர்கள் குமார் சிவராஜா ராஜ் சிவராஜா மற்றும் உதயன் சிவராஜா ஆகியோருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
அன்றைய விருதுகள் வழங்கும் விழாவில் பல இளைய தலைமுறை விற்பனை முகவர்கள் முழுமையாக தங்களை அர்ப்பணித்து செயற்பட்ட காரணத்தால் பலர் உயர் விருதுகளைத் தட்டிக் கொண்டார்கள் என்பதை காணக் கூடியது.
தமிழ் பேசும் விற்பனைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை எட்டக்கூடிய அளவிற்கு ஏனைய சமூகம் சார்ந்த விற்பனைப் பிரதிநிதிகளும் விற்பனைக்கான சாதனை விருதுகளைப் பெற்றுக்கொண்டார்கள் மேற்படி வைபவத்தில் ரொறன்ரோ வைத்தியசாலைக்கு வழங்குவதற்காக நிதி சேகரிப்பு பணியும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.