Conservative Party Pierre Poilievre, Jagmeet Singh, the leader of the next-level opposition NDP, the leader of the next-level opposition Canadian Green Party Elizabeth May, and members of other parties were also graced Tamils’ Event.
கனடாவின் தலைநகரமான ஒட்டாவவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘தமிழர் மரபுரிமை மாதம்’ கொண்டாட்டத்தில் மொன்றியால்- ரொறன்ரொ- கிச்சினர்-வன்குவர் நகரங்களிலிருந்து தமிழ்க் கனேடியர்கள்
கடந்த திங்கட்கிழமையன்று ஒட்டாவா மாநகர் நோக்கி ரொறன்ரொவிலிருந்து சென்ற அன்பர்களில் உதயன் நண்பர்கள் குழுவினரும் அடங்கியிருந்தனர்.
மேற்படி ‘தமிழர் மரபுரிமை மாதம்’ கொண்டாட்ட விழாவை கனடிய அரசாங்கத்தின் சார்பில் கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் திருமதி அனிற்றா ஆனந்த் மற்றும் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோர் தங்கள் அலுவலகங்களின் உத்தியோகத்தர்களின் உதவியோடு நடத்தினர்.
இந்த விழாவில் அதிசயம் மிக்க ஒரு காட்சியாக கனடாவின் பிரதமர். கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் Pierre Poilievre, அடுத்த நிலை எதிர்க்கட்சியான என்டிபி கட்சியின் தலைவர் Jagmeet Singh மற்றும் அடுத்த நிலை எதிர்க்கட்சியான கனடிய பசுமைக் கட்சியின் தலைவர் Elizabeth May ஆகியோரும் இன்னும் வெவ்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மற;நது வருகை தந்து சிறப்பித்தனர்.
இந்த கௌரவம் என்பது எமது மொழிக்காகவும் பண்பாட்டிற்காகவும் தமிழ்க் கனேடியர்களின் உயரிய சேவைக்காகவுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு சிறப்புரையாற்றிய கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கனடிய தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் தமிழ் மக்களை பாராட்டியதோடு இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலை அந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தின் தலைவர் முன்வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இவ்வாறு இருந்தாலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மனித நேய அடிப்படையில் கனடிய அரசு 30 மில்லியன் டாலர்களை உடனடியாக வழங்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
அங்கு உரையாற்றிய கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிற்றா ஆனந்த் அவர்கள் தனது உரையில் தனது பாட்டனார் தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் பி;றந்து 1800 களில் காந்திஜி அவர்களோடு இணைந்து தேசத்தின் விடுதலைக்காக போராடியதாகவும் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டதாகவும் தனது தந்தையார் கனடாவில் குடியேறிய பின்னர் தான் பிறந்து வளர்ந்து ஒரு தமிழிச்சியாக இந்த அமைச்சர் பதவியை அலங்கரிப்பதாகவும் பெருமை பொங்கத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தை அங்கு சமூகமளித்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பிரதமர் மற்றும் தலைவர்கள் அங்கு கலந்து கொண்டவர்களோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிற்றா ஆனந்த அவர்கள் உதயன் பிரதம ஆசியரோடு உரையாடுகையில “தாங்கள் ரொறன்ரோவில் நான் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர். தற்போது ஒட்டாவா நகரில் எமது அரசு சார்பான ‘தமிழர் மரபுரிமை மாதம்’ கொண்டாட்ட விழாவி;ல் கலந்து கொண்டதற்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்’ என்று சிரித்த முகத்துடன் தெரிவித்தமை குறிப்பிடத்த்ககது.
The Prime Minister of Canada Hon Justin Trudeau graced the event with his Cabinet Members It was also a wonderful sight at this ceremony. The leader of Canada’s Main opposition Conservative Party Pierre Poilievre, Jagmeet Singh, the leader of the next-level opposition NDP, and the leader of the next-level opposition Canadian Green Party Elizabeth May, and members of other parties were also graced this Tamil’s Event. They have forgotten party differences and celebrated by visiting.
It should be noted here that this honor is for the outstanding service of Tamil Canadians to our language and culture.
This opinion was openly expressed by hundreds of Tamil people who were gathered there.
செய்தியும் படங்களும்:- சத்தியன்