(23-08-2023)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகை தந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையில் காணி அபகரிப்பு குழு சிறை பிடித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய மத தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் நேற்றையதினம் (22.08.2023) மயிலத்தமடு பகுதிக்கு வாகனங்களில் சென்றனர்.
குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய மத தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் சம்பவ தினமான காலை மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு வாகனங்களில் இரு வணபிதாக்கல், ஒரு மெனளலி, இரு இந்து குருக்கள் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேர் சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடி விட்டு பகல் ஒரு மணி அளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு எல்லை பகுதியில் அமைந்துள்ள கம்பி பாலத்தில் அருகாமையில் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த பல்சமய மத தலைவர்களின் வாகனங்களை கம்பி பாலத்தில் குறுக்கே தேர் ஒருவருடனான நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றினைந்து வீதி தடையை போட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்பு களை பிடுங்கி எடுத்து அவர்களை தடுத்து வைத்ததுடன் இந்து குருக்கள் ஒருவரை தாக்க முற்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து கரடியனாறு மற்றும் அரங்கலாவ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று பௌத்த தேரர் உடனான குழுவினருடன் பேச்சில் ஈடுபட்டு அவர்கள் ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவு செய்த காட்சிகள் அனைத்தையும் தேரர் அச்சுறுத்தி அழித்ததுடன் இந்த செய்தியை பிரசுரிக்க கூடாது என கடிதம் ஒன்றை வற்புறுத்தி பெற்றுள்ளனர்.
தொடர்ந்தும் பௌத்த தேர் உடனான குழுவுடன் பொலிசார் பேச்சவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் 6 மணித்தியாலங்களின் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.