(6-09-2023)
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31)அன்று தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் (05)நேற்று குறித்த அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை.
அதனடிப்படையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று,(6) காலை 8. மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மனித புதைகுழி அமைந்த பகுதி குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது டன், குறித்த புதைகுழி பகுதிக்கு பாதுகாப்பு கூரைகள் அமைக்கப்பட்டு இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தொல்லியல் துறை சார்ந்தோர், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,தடயவியல் போலீசார், சமூக ஆர்வலர் அ.பீற்றர் இளஞ்செழியன், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கி.சிவகுரு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.