2019 ஆம் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹொலிரூட் மற்றும் லோகி பெருந்தோட்டத்திலும், பதுளை மாவட்டத்தில் ஊவா ஹைலன்ட் மற்றும் அட்டாம்பிட்டிய பெருந்தோட்டத்திலும் உள்ள இளைஞர் யுவதிகள் 40 பேரை தெரிவுசெய்து, சுமார் ஓராண்டு காலம் சில செயலமர்வுகள் ஊடாக புகைப்படபிடிப்பு பற்றிய அறிவையும் கலை மற்றும் சமூக அரசியல் அறிவையும், சமூக மாற்றுத்திற்கான கலையைப் பயன்படுத்துவது பற்றிய அறிவையும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய சமூக வாழ்வு அவர்களாலேயே கமராவில் பதிவு செய்யப்பட்டது. இது ஒரு ஆய்வு ரீதியான நிகழ்ச்சி திட்டமாகும். சமூக அறிவினை இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வழங்கி அவர்களுடைய வாழ்க்கையில் யதார்த்தத்தை ஆய்வு செய்தல் இதன் மூலம் இடம் பெறுகின்றது. மலையகம் தொடர்பாக பல கலைஞர்கள் பல படைப்புகளில் பல விடயங்களை கூறியுள்ளனர்.
உதாரணமாக சிறுகதைகள், கட்டுரைகள்,கவிதைகள், குறுந்திரைப்படங்கள் போன்ற கலைகளை பயன்படுத்தி மலையக சமுக முறைகளை வெளிகொண்டு வந்துள்ளனர் ஆனால் மலையக வரலாற்றின் முதன் முறையாக மலையக புகைப்பட கலைஞர்களாகிய இந்த இளைஞர் யுவதிகளின் தேயிலை சாயம் புகைப்பட கண்காட்சியின் மூலம் மலையக மக்களின் உண்மையான வாழ்க்கை முறையை வெளிக்காட்டினர்.
இந்த நான்கு வருட பயணத்தில் இந்த இளைஞர் யுவதிகள் சமூகம் தொடர்பாகவும் சமூக பிரச்சனைகள் தொடர்பாக பாரிய ஆய்வில் ஈடுப்பட்டே இந்த புகைப்பட கண்காட்சிகள் செய்யப்பட்டது. இந்த புகைப்பட கண்காட்சியில் இளைஞர் யுவதிகளின் 45000 புகைப்படங்களில் இருந்து 100 புகைப்படங்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டது. இதில் மலையக மக்களின் வாழ்க்கை முறை, உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த புகைப்பட கண்காட்சி தலவாக்கலை, ஊவா ஹைலன்ட,பதுளை,கண்டி, கொழும்பு, யாழ்பாணம், மட்டகளப்பு மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்டது. கொட்டகையில் நடைப்பெற்ற புகைப்பட கண்காட்சிக்கு ஆறு நாடுகளில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேலும் இந்த செயற்திட்டத்திற்கு SRP, GIZ ,மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA), ஊவா சக்தி மற்றும் சுயசக்தி ஆகிய நிறுவனங்கிளின் அனுசரனை வழங்கியுள்ளது. எமது செயல்திட்டத்தின் எதிர்கால நோக்கம் மலையக சமூகத்தின் பிரச்சனைகளை மாத்திரமின்றி ஏனைய சமூகங்களின் பிரச்சனைகளையும் புகைப்படங்களின் மூலம் வெளிக்கொண்டு வருவதாகும்.
படங்கள் உதவி: சுயசக்தி அறக்கட்டளை- ஹட்டன்





























