ஸ்காபுறோவில் இயங்கும் ‘வில்லா கருணா’ முதியோர் இல்லத்திற்கு விஜயம் செய்த ஒன்றாரியோ லிபரல் வேட்பாளர் Mazhar Shafig
ஸ்காபுறோவில் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் ‘வில்லா கருணா’ முதியோர் இல்லத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் விஜயம் செய்த ஒன்றாரியொ லிபரல் கட்சி வேட்பாளர் Mazhar Shafig அவர்கள் மேற்படி இல்லத்தின் நிறுவனர் திருமதி இந்திராணி நாகேந்திரயைச் சந்தித்து இல்லத்தின் தேவைகள் பற்றி உரையாடினார். அத்துடன் அங்கு தங்கியுள்ள தமிழ் பேசும் மூத்தோர்களையும் சந்தித்து உரையாடினார். அத்துடன் அவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தார்.
இங்கு காணப்படும் படங்களில் ‘வில்லா கருணா’ முதியோர் இல்லத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் காணப்படுகின்றனர்.
(படங்கள்_ அர்யுன்)