(06-07-2022)
முன்னாள் எம்.பியான ஹிருணிகா பிரேமசந்திர இன்று காலை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் திடீரென ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலில் ஹிருணிக்கா வைக் கண்டதும் ஜனாதிபதி மாளிகையின் வாயில்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது.
எனினும் ஹிருணிக்கா தரப்பினர், ஜனாதிபதியை கடுமையான வார்த்தைகளில் கூச்சலிட்ட வண்ணம் மாளிகையின் பிரதான வாயில் முன்பு தரையில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் .
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






















