சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த கப்பலில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர். குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கனடாவிற்குச் சென்று தஞ்சம் அரசியல் தஞ்சம் கோரி அங்கு நிரந்தரமாக வாழலாம் என்ற நோக்கத்தில் கடத்தல் காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டு தற்போது வியட்னாம் நாட்டில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் அனைவரைக்கும் உணவு மற்றும் அவசியமான பொருட்களை வழங்கி நன்கு உபசரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இவர்களை நாட்டுக்கு விமானமூலம் அழைத்துச் செல்ல இலங்கை வெளிவிவகார அமைச்சு முயற்சி எடுக்கின்றதாகவும் உறுதி செய்யப்படாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளுத.

தற்போது வியட்னாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அனைவரும் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக வியட்னாமிய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாகவும் கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது இவ்வாறிருக்க ஆபத்தான பயணத்தின் போது கடலில் சிக்கிய 303 இலங்கையர்கள் மற்றும் பதறும் உறவினர்களின் குரல்கள் பதியப்பெற்ற ஒளி நாடாக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பதிவு செய்யப்பட்டுள்ளதும் உலகத் தமிழர்கள் அறிந்த ஒன்றே.

மேலும் படகில் ஏறுவதற்கு முன் சட்டவிரோத பயணத்திற்காக ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணத்தினை இந்த இலங்கையர்கள்கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
வியட்னாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அனைவரும் அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்த கருத்துக்களின்படி, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையும் அரசியல் நெருக்கடிகளையும் சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் அனைவரும் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக தெரவித்துள்ளனர் எனஅறியப்படுகின்றது அத்துடன் அவர்கள் அனைவரும் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறானதொரு ஆபத்தான கடற் பயணத்தின் போது மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் ஆகியவை மிகவும் நேர்த்தியாக வழங்கப்படுகிறதாக வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது






















