தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரண்மனை 4 படத்தின் வெளியீடு தேதியையும், படத்தின் முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் 2ம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் படத்தின் நான்காம் பாகமும் உருவாகியுள்ளது. இந்த பாகத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அவ்னி சினிமேக்ஸ் பி லிமிடட் சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். குஷ்புவின் பிறந்தநாள் அன்று படத்தின் பதாகையை படக்குழு வெளியிட்டது. இதனையடுத்து படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் ஏப். 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஹிப்ஹாப் ஆதி இசையில் படத்தின் முதல் பாடலான ‘அச்சச்சோ’ பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.