ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தலைவர் -171 படத்துக்கு ‘கழுகு’ என்று தலைப்பில்’ பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் ‘சூட்டிங்’ வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் “பர்ஸ்ட் லுக்” போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்ததுடன் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தின் ‘தலைப்பின் ப்ரமோ’ வருகிற 22 – ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கியமான கதாபாத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதே போல் நடிகர் சத்யராஜ் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.