டிரம்ப் கொண்டு வந்த சட்டத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது/ அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குடியேற்ற நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வரும் வெளிநாட்டினரை, நீதிமன்ற வளாகத்திலேயே ரகசியப் பிரிவு அதிகாரிகள் திடீரெனக் கைது செய்து சிறையில் அடைக்கும் புதிய நடைமுறை கடந்த ஆண்டு முதல் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த அதிரடி கைதுகளால் நீதிமன்றத்திற்கு வர மக்கள் பயந்ததால் வழக்குகள் முடங்கின. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சான் பிரான்சிஸ்கோ நீதிமன்ற நீதிபதி கேசிபிட்ஸ், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் அதிரடித் தடை விதித்து உத்தரவிட்டார். உரிய திட்டமிடல் இல்லாமல் அரசு இந்த கைதுகளைச் செய்வதாகக் கூறி டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.


















