நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்பிலிக்ஸ் வாங்கியிருப்பது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். பீல் குட் லவ் என்டர்டெய்ன்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் அருளானந்து – மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து படக்குழு காணொளி வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.


















