”வராகி” அம்மன் பான்-இந்தியா திரைப்படம். சக்திவாய்ந்த தெய்வமான வராகி அம்மனின் மகிமையையும், பெருமைகளையும் உலகறியச் செய்யும் வகையில், பான்-இந்தியா திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை, வி.கே.வி.பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வடிவேலன் பி.ஜெ.மற்றும் சந்திரசேகரன் வி.எம். ஆகியோர் தயாரிக்கின்றனர். இவர்களுடன் ஸ்டெல்லார் கிராபட் ஸ்டுடியோஸ் சார்பில் பாலசுப்ரமணியம் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த பாலாஜி கன்னியப்பன் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். நவீன் கணேஷ், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பக்தியும், பிரம்மாண்டமும் இணையும் இப்படத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் பெரும் பலமாக அமையவுள்ளது.

















