துருவ் விக்ரமின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 4-வது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் துருவ் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். அவரே சபி உடன் இணைந்து திரைக்கதையையும் எழுதியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதை படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
முதல் முறையாக துருவ் விக்ரமும், மைத்ரி மூவி மேக்கர்ஸும் இணைவதால் இந்தப் படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், கதைக்களம், இசையமைப்பாளர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ருக்மணி வசந்த், ஸ்ரீலீலா நாயகிகளாக நடிக்க உள்ளதாகவும், சாய் அபயங்கர் இசையமைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


















