தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ‘சரவணபவன்’ சைவ உணவகத்தின் நூற்றுக்கணக்கான கிளைகள் உலகெங்கும் இயங்கிவருகின்றன.
அவற்றுள் நான்கு ‘சரவணபவன்’ கிளைகளை கனடாவில் நிர்வகித்து வருபவரும் வர்த்தகத்துறை முன்னோடியும் கனடா உதயன் பத்திரிகையின் அனைத்து செயற்பாடுகளையும் செவ்வனே ஆற்றுவதற்கு முன்வந்து ஆதரவு வழங்குபவருமான சகோதரர் கணேசன் சுகுமார் அவர்கள் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் பொது வைத்தியசாலைகள் மற்றும் ஆலயங்கள் -பொது அமைப்புக்கள் ஆகியவற்றுக்கு தாரளமாக நிதி அன்பளிப்புக்களை வருபவர் ஆவார்.

அந்த வரிசையில் நேற்று 01-07-2026 அன்று கனடா தினத்தன்று சரவணபவன் ஸ்காபுறோ கிளையில் ஆயிரக்கணக்கான முதியவர்களான பெரியோர்களுக்கு இலவசமாக மசாலா தோசையும் தேநீர் மற்றும் குளிர்பானங்களையும் வழங்கினார். இதற்காக வாகனத் தரிப்பிடத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பெற்றும் அழைக்கப்பட்டவர்கள் வசதியாக இருந்து உணவருந்திச் செல்ல வாய்ப்புக்களை வழங்கினார்.
அத்துடன் அன்றைய தினம் கனடாவின் மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள்- மாகாண அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள்- அமைச்சர்கள் மற்றும் நகரசபைகளின் கவுன்சிலர்கள் என பலரும் சங்கமித்த நிகழ்வில் ஸ்காபுறோ பொது வைத்தியசாலை நிதிக்காக 5 இலட்சம் கனடிய டாலர்களை அன்பளிப்புச் செய்தார். வைத்தியசாலையின் சார்பில் அதன் பிரதிநிதி ஒருவரிடம் கணேசன் சுகுமார் மற்றும் பிரமுகர்கள் ஒன்றிணைந்து அந்த’மாதிரிக் காசோலை’யை வழங்கினார்கள்.. இங்கே காணப்படும் படத்தில் கனடா தினத்தையொட்டி சிவப்பு நிறை ‘ஷேர்ட்’ அணிந்து கணேசன் சுகுமார் அவர்கள் நண்பர்கள் மற்றும விருந்தினர்கள் ஆகியோருடன் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்.
– சத்தியன்




















