அனைத்துலக தமிழர் பேரவை கனடாவில் ஒக்டோபர் 15, 16, 17, 18ம் திகதிகளில்–நடத்தவுள்ள நான்கு நாள் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
அது தொடர்பான ஒரு ஊடகச் சந்திப்பு! 24-09-2026
‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ (Classical Tamil and Tamils in the Era of Artificial Inteiligence) என்னும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15, 16, 17, 18ம் திகதிகளில்- நான்கு நாட்கள்-கனடாவில் ரொறன்ரோ மாநகரில் நடைபெறவுள்ள மேற்படி சர்வதேச மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு ஒன்று எதிர்வரும் 24-09-2026 அன்று வியாழக்கிழமை மாலை 6.30 தொடக்கம் 8.30 வரை நடைபெறவுள்ளது
மார்க்கம் நகரில் 80 Travail Road Unit-1 Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த ஊடகச் சந்திப்பில் அச்சு ஊடகம்-தொலைக் காட்சி- வானொலி- சமூக ஊடகங்கள்- இணையவழி ஊடகங்கள்- கட்டுரையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து சிறப்பித்து அன்றைய உரையாடல்களையும் செய்திகளையும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் ஊடகப் பங்களிப்பை வழங்குமாறு அனைத்துலக தமிழர் பேரவையின் தலைமையகம் அழைக்கின்றது
















