பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம்தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

















