மாநாட்டில் உரையாற்றவும் கருத்தரங்குகளில் பங்கு பற்றவும் வருகை தந்துள்ள பிறநாட்டுப் பேராளர்கள் நேற்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினர்!
கனடாவின் மார்க்கம் நகரில் இன்று 19ம் திகதி சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ள ‘உலக தொல்காப்பிய மாநாடு-2026 இல் கலந்து கொண்டு உரையாற்றவும் கருத்தரங்குகளில் பங்கு பற்றவும் மேலும் ஆய்வுக் கலந்துரையாடல்களில் பங்கெடுக்கவும் வருகை தந்துள்ள பிறநாட்டுப் பேராளர்கள் நேற்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர்களுக்கு மலர்க் கொத்து வழங்கி கௌரவித்த கனடா தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் மற்றும் பேராசிரியை விஜி அவர்கள் உட்பட அனைவரும் இங்கு காணப்படுகின்றார்கள்.
விமான நிலையத்தில் ‘தேசம்’ பத்திரிகையின் சார்பில் சங்கர் சிவநாதன் மற்றும் விசு கணபதிப்பிள்ளை ஆகியோரும் உதயன் பத்திரிகையின் சார்பில் அதன் பிரதம ஆசிரியரும் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.
சிங்கப்பூரிலிருந்து டாக்டர் சொக்கலிங்கம் தனது துணைவியாரோடு வருகை தந்துள்ளார்.
அத்துடன் தமிழ்நாட்டிலிருந்து திருவாளர்கள் பேராசிரியர்கள் ரமேஷ், முத்தையா மற்றும் முத்துச் செல்வன் மற்றும் பேராசிரியைகள் கோதைநாயகி, லதா. சரோஜா,சுதாராணி, மலையரசி ஆகிய அறிஞர் பெருமக்கள் நாளைய ‘உலக தொல்காப்பிய மாநாட்டை’ சிறப்பிக்க வந்துள்ளார்கள். பேச்சாளர்களை வரவேற்கும் கனடா தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் பேராசிரியை விஜி மற்றும் ஜெயக்குமார் சோமேஷ் மற்றும் சுதர்சன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அனைவரையும் கனடா உதயன் ஆசிரிய பீடம் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றது’
செய்தியும் படங்களும் ” சத்தியன்





















