ரொறன்ரோ மாநகரில் அண்மைக் காலப்பகுதியில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்ற ”லத்திகா புறடக்ஷன்ஸ்” நிறுவனம் கடந்த 17-10-2026 அன்று ஒஷ்ஷாவா நகரில் அமைந்துள்ள CANADA EVENT CENTRE மண்டபத்தில் நடத்திய KRISH – Live in Toronto-2026 ‘இசையின்பம்’! நிகழ்ச்சி நேர்த்தியாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது என்றால் அது மிகையாகாது.

ரசிகர்கள் நிறைந்த அந்த மண்டபத்தில்பாடகர் கிறிஸ் மேடையில் பிரபல திரைஇசைப் பாடகி தென்னிந்தியாவின் சௌந்தர்யாவுடனும் கனடிய ஆண் மற்றும் பெண் பாடக பாடகிகளோடும் தோன்றி கனடிய இசைக்குழுவினரின் அபாரமான பின்னணி இசையோடும் மகிழ்வித்து KRISH – Live in Toronto-2026 ‘இசையின்பம்’! என்னும் இவ்வாண்டின் இசை நிகழ்ச்சியை ஒரு ‘உச்சத்தைத் தொட்ட’ விழாவாக உயர்த்தி கனடிய ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார்.
அத்துடன் ‘லத்திகா புறடக்ஷன்ஸ்” நிறுவனத்தின் அதிபர்கள் சசி-பிரியா இணையருக்கும் பெருமையைத் பெற்றுக் கொடுத்தார் என்பதும் நிதர்சனமே!






















