எதிர்வரும் நவம்பர் 14ம் 15ம் திகதிகளில் கம்போடியா தேசத்தின் சியம் ரீப் நகரில் நடைபெறவுள்ள 3வது உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் கனடாவிலிருந்து கலந்து கொள்ளவுள்ள 3 கலை, இலக்கிய மற்றும் ஊடகச் செயற்பாட்டாளர்கள் 12ம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்கள்ரே.
மொன்றியால் வாழ் எழுத்தாளரும் கவிஞரும் நூலாசிரியருமான ‘வீணை மைந்தன்’ கே.ரிஇசண்முகராஜா, கலை இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாட்டாளரும் ‘தேசம்’ மாத இதழின் வெளியீட்டாளருமான ராம்சங்கர் சிவநாதன் மற்றும் கவிஞரும் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய உப-தலைவரும் ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசியருமான லோகேந்திரலிங்கம் ஆகியோரே மேற்படி மூவரும் ஆவார்கள்.

கம்போடியா தேசத்தின் சியம் ரீப் நகரில் நடைபெறவுள்ள 3வது உலகத் தமிழ்க் கவிஞர் மாநாடானது கம்போடியாவின் ‘அங்கோர் தமிழ்ச் சங்கம்; சீனு-ஞானம் ட்ரவல்ஸ், சீம் ரீப் பிராந்திய அரச திணைக்களமான கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்தும் ஒன்றாகும்.
மேற்படி மாநாட்டில். இலங்கை. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கவிஞர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் வாசகர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
கவிஞர்கள் மாநாடு முடிவுற்றதும் மூன்று நாட்கள் கம்போடியாவின் பல நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மற்றும் ராஜேந்திரசோழன் காலத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்ற சைவ ஆலயங்கள் அமைந்திருக்கும் இடங்கள் ஆகியவற்றை பார்க்கும் சுற்றுலாப் பயணமும் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மாநாடு தொடர்பான விடயங்களுக்கு கம்போடியா அங்கோர் தமிழச் சங்கத்தின் இலக்கமான +855969296456 என்னும் இலக்கத்தை அழைக்கவும்





















