ஈராக்கில் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஈராக். இந்நாட்டின் பஹ்ரா மாகாணம் அல் ஹர்தா நகரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. 800 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட இந்த மின் நிலையம் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், அந்த அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்..
















