– பட்டாசு கொளுத்தி, கேக் வெட்டி கொண்டாட்டம்
ந.லோகதயாளன்.
யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் தியாகி பொன். சிவகுமாரன் சிலை அமைந்துள்ள பகுதியில், சந்தைக்கு முன்பாக 26ம் திகதி அன்று வியாழக்கிழமை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, கேக் வெட்டி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
அந்த வழியாகச் சென்ற பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டமையுடன், வீதியால் பயணித்த பொதுமக்களும் கலந்துகொண்டு சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர்.
















