இலங்கையின் சனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை 11.30 மணிவரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. இதி்ல் 39 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றது
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், 15ம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச,
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ,
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க மற்றும் பொதுத் தமிழ் வேட்பாளர் அரியநேந்திரன் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார்கள்.
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை முதலாவதாகக் கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் ஆவணங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.