கனடா-ரொறன்ரோ ‘சக்தி நர்த்தனாலயா’ நாட்டியப் பள்ளியின் நிறுவனரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கரின் மாணவி பரதச் செல்வி ரெனி வித்யா எட்வேட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 07-11-2026 அன்று சனிக்கிழமை மாலை விற்பி நகரில் 78. Church Street South, Ajax என்னும் விலாசத்தில் அமைந்துள்ள AJAX CENTRE FOR ARTS மண்டபத்தில் நடைபெற்றது.
மண்டபம் நிறைந்த கலா ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் உற்சாகத்தையும் உவகையையும் அளித்தும். அரங்கேற்றத்திற்கு அழைக்கப்பெற்றிருந்த பரதநாட்டியத்துறையில் ஆழமாக அறிவும் பயிற்சியும் தேடலும் மிகுந்தவர்களான பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோரின் பாராட்டுக்களையும் புகழாரங்களையும் பெற்றுக்கொடுத்து அன்றை குரு ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கருக்கும் வித்யா எட்வேட்டிற்கும் மேலும் பாராட்டுக்களையும் ஈட்டித் தந்த ‘சக்தி நர்த்தனாலயா’வின் பரதநாட்டிய அரங்கேற்றம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.
அரங்கேற்றத்திற்கு பக்கவாத்தியக் கலைஞர்களான வாரகி விஜயராஜ் (வாய்ப்பாட்டு), மிரிதங்கம் ( அனேஷ் ஜெயக்குமார் ), இமயவர்மன் சிவகாந்தன் ( வீணை)மற்றும் புருஷோத் உதயசங்கர் (புல்லாங்குழல்) ஆகியோரும் குருவும் நடனங்களை அமைத்தவருமான ஶ்ரீமதி ஜனதி ரவிசங்கர் அவர்களின் வழிகாட்டலில் ஏற்கெனவே திட்டமிட்ட வண்ணமும் பயிற்சிகளின் அடிப்படையிலும் நேர்த்தியாக அனைத்து விடயங்களையும் கவனித்து அன்றைய பரதநாட்டிய அரங்கேற்றத்தின் வெற்றிக்கு கூட்டுப் பங்களிப்பை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, தனது குருவிடம் தான் கற்றுக் கொண்ட பரதத்தின் வித்துவத்தையும் நுட்பங்களையும் தனது அறிவாலும் கவனிப்பாலும் சிந்தனைத் தெளிவோடும் அனைத்து உருப்படிகளையும் ஒவ்வொன்றாய் வெவ்வேறு வகையான தோற்றங்கள் மற்றும் அசைவுகள் நகர்வுகள் முகபாவங்கள் போன்றவற்றை சபையோருக்கு சமர்ப்பித்த பரதச் செல்வி ரெனி வித்யா எட்வேட்டின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் நவரசங்களை நேர்த்தியாக ஒப்படைத்த நடன உருப்படிகளும் அவர் பெற்ற பாராட்டுக்களும் புகழாரங்களுக்கும் காரணமாக விளங்கின என்பதை பரத ரசிகர்கள் மண்டபத்தின் வெளியே பகிர்ந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது
இவ்வழகிய அரகேற்றத்தில் குரு ஜனனி ரவிசங்கர் அவர்கள், மாணவி செல்வி. ரெனி வித்யா எட்வேர்ட் அவர்களுக்கு ‘அரங்கேற்றச் சான்றிதழ்’ வழங்கி அவரது தகைமையை உறுதி செய்தார். மற்றும் அரங்கேற்றத்தை சிறப்புற தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் சாலினி பிள்ளை மற்றும் பக்கவாத்திய கலைஞர்கள் ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இறுதியில் பரதச் செல்வி ரெனி வித்யா எட்வேட்டின் குடும்பத்தினர் அனைத்து கலைஞர்களையும் குருவையும் ஏனைய உதவியாளர்களையும் கௌரவித்தனர்

































