ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு மாதாந்தம் தவறாமல் அச்சிலும் இணையத்திலும் வெளிவரும் ‘வெற்றிமணி’ வர்ண கலை இலக்கிய. சமூகம் சார்ந்த இதழின் ஆசிரியரும் கலைஞருமாகிய சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்கள் வெளியீடாக வந்துள்ள 3 நூல்களின் வெளியீட்டு விழா 21-11-2026 சனிக்கிழமையன்று மாலை மார்க்கம் நகரில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நடன ஆசிரியையும் சமூகச் செயற்பாட்டாளருமான மாலினி பரராஜலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுப்பிரமணியம் சிவகுமாரன் எழுதிய ‘கண்ணாவின் கோடுகளும் கோலங்களும்’, ‘மாதவியின் வில்லனாக இருந்த கணப்பொழுதுகள்’ மற்றும் இலங்கை வாழ் எழுத்தாளரும் .நடன ஆசிரியையுமான திவ்யா சுதன் அவர்கள் எழுதிய ‘நின்னைச் சரணடைந்தேன்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பெற்றன. மண்டபம் நிறைந்த விழாவாக வெற்றிகரமாக இடம்பெற்ற விழாவில் கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன.

வெற்றிமணி சிவகுமாரன் அவர்களைப் பாராட்டி ஒன்றாரியோ மாகாண அரசின் சார்பில் உறுப்பினர் லோகன் கணபதி எம்.எம்.பி அவர்கள் வழங்கிய பாராட்டுப் பத்திரத்தை ‘உதயன்’ நா. லோகேந்திரலிங்கம் மற்றும் ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
மூன்று நூல்கள் தொடர்பான ஆய்வுரைகளையும் வாழ்த்துரைகளையும் வெற்றிமணி சஞ்சிகையோடு நெருங்கிய நட்புக்கொண்ட பலரும் ஆற்றுவதற்கு அழைக்கப்பெற்றிருந்தனர். வௌியீட்டு உரைகளை கனடா எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் கவிஞருமான அகணி சரேஸ் அவர்கள் வழங்கினார்.
குரும்பசிட்டி மக்கள் ஒன்றியம் – கனடா அமைப்பு வெற்றிமணி சிவகுமாரன் தம்பதிக்கு பாராட்டுக் கேடயம் ஒன்றை வாசித்து வழங்கியது
























