ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் கலந்து சிறப்பித்த அமைச்சர் றெமண்ட் சோ அவர்களின் ஒன்றுகூடல்
கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 24ம் திகதி மாலை ஸ்காபுறோவில் நடைபெற்ற கௌரவ ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் ஸ்காபுறோ வடக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினருமான றேமண்ட் சோ அவர்கள் நடத்திய வருடாந்த ஒன்றுகூடலின் சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளராகவும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக்போர்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அங்கு கலந்து கொண்ட ஏனைய மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் பேசும் மாகாண உறுப்பினர் லோகன் கணபதி மற்றும் அஜின்கோர்ட் தொகுதியின் மாகாண உறுப்பினர் அரிஸ் பாபிகியன் ஆகியோரும் அடங்குவர். அத்துடன் அமைச்சர் றேமண்ட் சோ அவர்களால் அழைக்கப்பெற்றிருந்த மாகாண கொன்சவேர்ட்டிவ் கட்சியின் உறுப்பினர் டீபக் டெல்ஜேரா மற்றும் அவரது பாரியார் மற்றும் ‘தேசம்’ பத்திரிகையின் விளம்பர மற்றும் விநியோக முகாமையாளர் சங்கர் சிவநாதன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரும் அங்கு வரவேற்கப்பெற்றார்கள்.