கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள Computek College, திரு முரளி நாராயணதாஸ்
130 க்கும் மேற்பட்ட ஒன்றாரியோ மாகாணத்தின் தொழிலதிபர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்ற 22 வெற்றியாளர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் முகமாக அண்மையில் நடத்தப்பெற்ற் தெரிவுத் திட்டத்தின் படி 2025ம் , ஆண்டின் EY கனடா நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளவர்களில் தமிழ்ச் சமூகத்தில் நன்கு அறியப் பெற்றவரான Computek College, திரு முரளி நாராயணதாஸ் அவர்களும் தெரிவு செய்யப்பெற்றுள்ளார் என்பதை கனடா உதயன் ஆசிரிய பீடம் பெருமையுடன் அறிவிக்கிறது.
இந்த 22 வெற்றியாளர்களும் ஒன்றாரியோ மாகாணத்தில் மாத்திரமல்ல கனடிய தேசத்திலும் புதுமைகளைத் தூண்டுவது மட்டுமல்லாமல் – கனடிய வர்த்தகப் பரப்பை வலுப்படுத்துவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இறுதிப் போட்டியாளர்கள் அனைவரும் ,EY கனடா நிறுவனத்தினால் சமூக தாக்கம் மற்றும் நோக்கம் ஆகியவற்றிற்காக ஒரு சுயாதீன தீர்ப்புக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நாம் அறியத்தருகின்றோம்.
130 க்கும் மேற்பட்ட இறுதிப் போட்டியாளர்களிலிருந்து இந்த வருடம் மேற்படி 22 வெற்றியாளர்கள் அறிவிக்கப்பெற்றுள்ளார்கள்.
“இந்த ஆண்டின் இறுதிப் போட்டியாளர்கள் வணிகத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்கள் தங்கள் தொழில்கள் மற்றும் சமூகங்களை வடிவமைக்கும் தொலைநோக்கு பார்வையாளர்கள்” என்று ஆண்டின் EY தொழில்முனைவோர் கனடா திட்ட இயக்குனர் ரேச்சல் ரோட்ரிக்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். “தொழில்நுட்பம் முதல் விருந்தோம்பல், எரிசக்தி, ரியல் எஸ்டேட், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் பலவற்றிற்கு, இந்த தொழில்முனைவோர் அனைவரும் சவால்களைச் சமாளித்து, நம் அனைவருக்கும் பயனளிக்கும் புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.” என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
22 தொழிலதிபர்களின் பெயர்கள் கீழே காணப்படுகின்றன.
?Andrew Morgan of Ascension Automation Solutions Ltd.
?Hans Jain of Atria Development Corporation
?Muraly Srinarayanathas of Computek College
?Richard Abboud of Forum Asset Management
?Trevor Langdon of Green Standards
?Victoria Sopik of Kids & Company
?Adam Bercovici, Michael Kravshik of LumiQ
?Meeta Ingram of MI Concept + Design Inc.
?Scott Marcaccio of Myo
?Rob Hallewick of Nerva Energy
?Margaret Coons of Nuts For Cheese
?Isaac Langleben, Jacqueline Prehogan of Open Farm Pet
?Kevin Gauci of Optimus SBR
?Sam Osmow of Osmow’s
?Morgan Marlowe of Perkopolis
?Eddie Madaan, Apaar Madan of PostGrid
?Phil St-Cyr of Rootree Inc.
?Yvonne Chan of Santé Circle Health
?Shamira Jaffer of Signifi Solutions Inc.
?Vitaly Pecherskiy of StackAdapt
?Rocco Volpe of Structform International Limited
?Ray Gupta of Sunray Group of Hotels
























