பாஞ்சாலன்.
தமிழருக்கு பொங்கல் புது வருடத்தின் தொடக்கம்
பழங்குடிக்கு நன்றிநாள் புது வாழ்வின் தொடக்கம்
இரண்டும் விரதத்தில் துவங்கி விருந்தில் நிறையும்
பொங்கலும் நன்றிநாளும் தொன்மத்துத் தொடர்பு
இலங்கையில் பொங்கல் சூரியன் சாட்சியாய்
கனடாவில் நன்றிநாள் பனியின் காட்சியாய்
தெய்வத்திற்கும் மனிதர்க்கும் நன்றி சொல்லும்
அறுவடைத் திருவிழா நம் வாழ்வின் வேராம்
அக்டோபர் அறுவடை கனடா செழித்திடும்
தங்கத் தானியம் களஞ்சியம் நிரப்பிடும்
வீடுகள் மகிழ்ச்சியில் புன்னகை நிறைத்திடும்
உலகம் தழுவிடும் உறவின் பொக்கிஷம்.
பண்டைய ‘பில்கிரிம்கள்’ கதை பேசிட
பழங்குடி மனங்கள் கைகோர்த்திட
அறுவடை பண்டிகை ஆரம்பமாது
பின்னர் அதுவே நன்றி நாளாய் மாறிற்று.
அன்பும் நட்பும் ஒன்றாய் பிணைந்திட
அறுவடை உணவாய் மேசை விரிந்திட
விருந்தில் சுவையில் முக்கியம் பெற்றன
வான்கோழி இறைச்சியும் பூசனி நிரவலும்
நத்தாரில் ஒலித்துப் புகழ் பூக்கும்
‘ஜிங்கிள் பெல்ஸ்’ எனும் இனிய கீதம்
நன்றி நாளுக்காக பிறந்தது!
வரலாறு சொல்லும் வியப்பு இது!
பொங்கலோ நன்றியோ வாழ்வின் மகிழ்வே
குழந்தைகள் சிரிப்பில் வீடு பரவ
குடும்பம் ஒன்றாய் இதயம் மலர
உபசரித்த இயற்கைக்கு மானுட உபகாரம்
























