மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்முட்டி தமிழில், மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2024ம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ‘பிரம்மயுகம்’ என்கிற திரைப்படம் வெளியானது 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நடக்கும் விதமான கதை அம்சத்துடன் ஒரு ஹாரர் திரில்லர் படமாக கருப்பு வெள்ளையில் இது உருவாகி இருந்தது. இந்த படத்தில் மம்முட்டி 80 வயதான ஒரு மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார். உலகின் உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது விழா, இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. விருதைக் கடந்து சில படங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் என்ற பெயரில், சிறந்த படங்களின் திரையிடலும் நடைபெறும். இந்தப் படம் பிப்ரவரி 12-ந் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட இருக்கிறது. இந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் ‘பிரம்மயுகம்’ பெற்றுள்ளது. இந்த குறும்படம் அந்த நேரத்தில் ஆஸ்கார் விருதை வெல்லவில்லை என்றாலும், அப்படத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில்தான் ‘பாரஸ்ட் மீட்ஸ் தி சீ’ என்ற பெயரில் ஒரு ஆஸ்கார் திரையிடல் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
























