நடிகர் விக்ராந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்த பதாகையில் படத்தின் தலைப்பு ‘அண்டர் 18’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த வேறு எந்த வித தகவலும் வெளியாகவில்லை. நடிகர் விக்ராந்த் எல்பிடப்ளியூ, மதராசி, மார்க் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘தீயவர் குலை நடுங்க’ படம் வெளியானது. அதனை தொடர்ந்து, கருப்பர் நகரம், மோகன்தாஸ், உத்தரகாண்டா, ஓ.! சுகுமாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
























