தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது; ”குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைச்சர் நேரு, அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது. மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான கவுண்ட்டவுன் இன்றோடு தொடங்கிவிட்டது! கூடிய விரைவில், திமுக உடன்பிறப்புகளின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும்!” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
























