ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ளப் படம் கருப்பு. இதில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன், நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஒடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இப்படம் மே.4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
























