இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்களின் ‘சரிகா’ இசைக் கல்வி நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம்!

கனடாவில் நன்கு அறியப்பெற்ற இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்களின் ‘சரிகா’ இசைக் கல்வி நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம் கடந்த யூன் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோர்த் யோர் நகரில் உள்ள கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அன்றை அரை நாள்விழா இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தவதில் இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்களின் குடும்பத்தினரும் பெற்றோரும் மாணவ மணிகளும் அத்துடன் இசைக் கலைஞர்கள்- வர்த்தக அன்பர்கள்- ஊடக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்- பத்திரிகை ஆசிரியர்கள் பாடக பாடகிகள் என அனைத்துத் தரப்பினரும் தங்களை அர்ப்பணித்து விழாவை வெற்றிகரமான நடத்துவதற்கு பக்கபலமாக விளங்கினார்கள் என்பதை அங்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
எவ்வாறாயினும் இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்கள் விழாவின் ஆரம்பம் தொடக்கம் இறுதிவரையிலும் மேடையை விட்டு விலகிச் செல்லாமல் அனைத்தையும் நேரயாகக் கவனித்தும் விருந்தினர்களை வரவேற்றும் மாணவ மணிகளை உற்சாகப்படுத்தியும் பெற்றோருக்கு நன்றி செலுத்தியும் வர்த்தக அன்பர்களுக்கு தனது இதய பூர்வமான வாழ்த்துக்களைப் பகிர்ந்தும் ஊடக நண்பர்களை உற்சாகப்படுத்தியும் முழுக்கவனத்தோடு விழாவை தலைமை தாங்கி நகர்த்திச் சென்றார் என்றால் அது மிகையாகாது.
அன்றைய விழாவானது. இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்களின் ‘சரிகா’ இசைக் கல்வி நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டமாக மாத்திரமல்லாது, இனிய பாடக பாடகிகளைகளை மேடைக்கு அழைத்து அவர்களை பாட வைத்தும், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள பிரபல பாடகர் ராமு அவர்களை (எஸ்பிபி அவர்களைப் போன்ற குரல்வளம் மிக்கவர்) மேடையில் பாடவைத்தும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுக்களை வழங்கவும் பயன்படுத்தினார் என்பது விழாவின் ‘உச்சக்கட்டம்’ என்றே சொல்லவேண்டும்.
மேலும் அன்றைய விழா மேடையில் 5500 டாலர்களுக்கும் அதிகமான தொகையில் கொள்வனவு செய்யப்பெற்ற இசைக்கருவிகள் மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் ஆகியன மாணவ மாணவிகளுக்கும் ஏனையோருக்கும் வழங்கப்பட்டமை பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
‘சரிகா’ இசைக் கல்வி நிலையத்தில் தமது பிள்ளைகளை இசை பயிலவும் அல்லது இசைக்கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்ளவும் நியுயோர்க் ராஜா அவர்களை தொடர்பு கொள்ள 416 884 7288 என்னும் இலக்கத்திலோ அன்றி
Learn@saregamusic.com என்னும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்
























