‘தி ஒடிஸி’ படம் 1 பில்லியன் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17-ந் தேதி வெளியான திரைப்படம் ‘தி ஒடிஸி’. கிரேக்க இலக்கியத்தின் புகழ்பெற்ற காவியமான ‘ஒடிசி’யை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், டிரோஜன் போரில் பங்கேற்ற மன்னன் ஒடிசியஸ் தனது நாட்டுக்கு திரும்பும் பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களை கதைக்களமாக கொண்டுள்ளது. சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘தி ஒடிஸி’, முதல் ஒரு வாரத்திலேயே சுமார் 364 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.3,500 கோடிக்கு மேல் வசூலித்தது. தொடர்ந்து உலகம் முழுவதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிவரும் இப்படம், தற்போது 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9,500 கோடி) வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
















