ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்திற்குள் உள்ளே சென்று பார்வையிட்டார். அப்போது மகாத்மா காந்தியின் பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து மகாத்மா காந்தியின் ஆவணப்படத்தை முதல்-அமைச்சர் கண்டு ரசித்தார். மேலும் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள வருகை பதிவேட்டில் தன் பெயரை முதல்-அமைச்சர் விஜய் பதிவு செய்தார். தொடர்ந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டபோது காந்தியின் உபதேசங்களில் ஒன்றான, ‘நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம்.. முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்’ என்கிற வாசகத்தை நிர்வாகி ஒருவர் காண்பித்தார்.
















