வயலின் வித்தகர் ஜெயதேவன் நாயரின் ‘சரிகா’ இசை மற்றும் கலை நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா!
தமது நிறுவனத்தின் ‘வெள்ளி விழா’வில் தனது வெற்றிகரமான கலைப் பயணத்திற்கு ஆத்மார்த்தமான ஆதரவை வழங்கிய அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவித்து மகிழ்நத அற்புதத் தருணம்!
கனடா வாழ் பிரபல வயலின் வித்துவான் ‘வித்தகர் ‘ஜெயதேவன் நாயரின் ‘சரிகா’ இசை மற்றும் கலை நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா கடந்த 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ‘சீனக் கலாச்சார’ மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பிரபல வயலின் வித்துவான் பேராசிரியை தனதேவி மித்ரதேவ தலைமை தாங்கினார்.
அன்றைய விழாவில் அற்புதமான ஒரு மேடை நிகழ்வாக ‘மகாபாரதக் கதை’யின் முக்கிய காட்சிகள் ‘செயற்கை நுண்ணறிவு’ முறையில் திரையில் காட்சியாக பார்வையாளர்களை மகிழ்விக்க ஏற்கெனவே இசையமைக்கப்பட்ட இசையோடு இணைந்து ‘சரிகா’ இசை நிறுவனத்தின் வயலின் மாணவ மாணவிகளின் அற்புதமான இசையும் இணைந்து அந்த நிமிடங்கள் பார்வையாளர்கள் அனைவரையும் இசையின்பத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றன என்றால் அது மிகையாகாது.
அன்றை தமது நிறுவனத்தின் ‘வெள்ளி விழா’வில் தனது வெற்றிகரமான கலைப் பயணத்திற்கு ஆத்மார்த்தமான ஆதரவை வழங்கிய அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவித்து மகிழ்நத அற்புதத் தருணம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது அத்துடன் அந்தக் காட்சி அர்த்தமுள்ளதாகவும் விளங்கியது.
மேற்படி கௌரவிப்பு நிகழ்வில் முக்கியமானவர்களாகவும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டவர்களாகவும் விளங்கியவர் திருவாளர் சட்டத்தரணி நாதன் ஶ்ரீதரன் அவர்கள், கலைஞர் மற்றும் தொழிலதிபர் வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்கள், மிருதங்க வித்துவான் வாசுதேவன் இராஜலிங்கம்அவர்கள், நடனக் கலைஞர் மற்றும் குரு வாசு சின்னராசா அவர்கள்; மற்றும் மிருதங்கக் கலைஞர் கௌரி சங்கர்அவர்கள் மற்றும் நடனக் கலைஞர் திருமதி லதா பதா அவர்கள் ஆகியோர் ஆவர்.
இவர்களை விட மேலும் பலர் அங்கு கௌரவிக்கப்பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


























