வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானா ரவிக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை செல்வி. பேபி சஹானா ரவி அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனது அபாரமான விளையாட்டுத் திறன், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் அயராத உழைப்பால் சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதனை படைத்துள்ள அவரது வெற்றி, எண்ணற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இவர் தொடர்ந்து பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மேலும் பல பெருமைகளைத் தேடித்தர எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
















