சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் ஒருவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் இந்தியர் ஆவார். விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.















