திருகோணமலை ஹபரண மற்றும் யாகலை சரணாலயங்களில் உள்ளது போன்ற சுற்றுலா பயணத்தை மன்னாரிலும் அமைப்பது தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் செய்தனர்.
திருகோணமலை ஹபரண யானைச் சவாரிபோன்று மன்னார் மடுப் பகுதியில் அமைப்பதற்கு 21ம் திகதி அன்றைய தினம் ஹபரணப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இதேபோன்று யால கடல் பகுதியில் வாகனங்களில் சென்று வன விலங்குகளை பார்வையிடும் ஏற்பாட்டை வில்பத்து முதல் சிலாவத்தை வரையான காட்டுப் பகுதியில் முன்னெடுக்கும் நோக்கிலும் நேரில் சென்று ஆராயப்படுகின்றது.
இந்தப் பயணத்தின்போது மன்னார் மாவட்ட அரச அதிபர், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அதிகார சபை உள்பட பலரும் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















