கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட’ அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பு ஒக்டோபர் 15ம், 16ம், 17ம் ஆகிய மூன்று நாட்கள் நடத்திய வெற்றிகரமான தமிழ்மொழி ஆராய்ச்சி மாநாட்டினைத் தொடர்ந்து நான்காவது நாளான 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை டுறம் கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடத்திய அழகிய கலை மற்றும் விருது வழங்கும் விழாவில் மூன்று அர்ப்பணிப்பு மிக்க சாதனையாளர்களுக்கு அனைத்துலக சமூக விருதுகள் வழங்கப்பெற்றன.
அவர்களில் தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தின் திருகோணமலை தொகுதியின் உறுப்பினராக சேவையாற்றும் சண்முகம் குகதாசனுக்கு அவர்களுக்கு சமூக சேவைக்கான சாதனை விருதும் வாழ்நாள் பேராசிரியரும் அறிஞருமான அருணாசலம் சண்முகதாஸ் அவர்களுக்கு தமிழ்மொழி ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் திறனுக்கான உயர் சாதனை விருதும் நோர்வே தேசத்தில் வாழ்ந்த வண்ணம் ஆடற்கலை மற்றும் கலை இலக்கியம் பண்பாடு ஆகிய துறைகளில் நீண்ட காலம் சேவையாற்றும் கவிதா லக்ஸ்மி அவர்களுக்கு அத்துறைகள் சார்ந்த சாதனை விருதும் வழங்கப்பெற்றன.
மேற்படி விருதுகள் மேடையில் ;வழங்கப்பெற்ற போது அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் மற்றும் ஏனைய அறிஞர் பெருமக்கள் அத்துடன் பேரவை வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் அதன் முக்கிய உறுப்பினர்கள் என அனைவரும் மகிழ்ச்சியோடு நிற்பதைக் காணலாம்


















