தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை தமிழக வெற்றி கழக அரசு சீரழித்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு, இவற்றை கண்டித்து வருகிற அக்டோபர் 31-ந்தேதி நாளை தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போகிறது. சினிமாவுல ஹீரோவா இருக்கின்றவர், நிஜ வாழ்க்கையிலும் இருப்பார் என சிலர் செய்த தவறு ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. தவெக கட்சி தலைவர், ஆட்சி அமைவதற்கு முன்னால் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை, போதை பொருட்களால் குற்றங்கள் நடக்கிறது.. இதை மட்டும் தான் பேசி ஆட்சிக்கு வந்தார். தமிழக வெற்றி கழக ஆட்சியில் பட்டப்பகலில் சாலையில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், முதியவர் வீட்டில் நகைக்காக கொலை எல்லாமே சர்வ சாதாரணமாக நடக்கிறது. சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகின்றனர். குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட இந்த அரசின் மீது பயமில்லை. குற்றவாளிகள் இதை அவர்களுக்கான ஆட்சியாக கொண்டாடுகின்றனர். அனைத்து கட்சிகளும் கண்டனம் மற்றும் அறிக்கை தெரிவிக்கின்றனர். ஆனால் முதல் – அமைச்சரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. மக்களுக்காக நான் பேசுறதை எல்லாம் ஒரு நல்ல அரசு சரிசெய்ய பாக்கணும். எந்த கட்சி மக்கள் பிரச்சினையை பேசுனாலும் அவர்களின் பதிவுக்கு கீழ் திட்டுனாலே போதும்னு விட்டுடுறாங்க. தமிழக மக்களுக்கு அண்ணனா இருப்பேன் மாமாவா இருப்பேன் சித்தப்பா பெரியப்பாவா இருப்பேன் என்று பேசினாரே. முதல்ல அவர் முதல் – அமைச்சரா இருக்கட்டும். அவர் வேலைய அவர் ஒழுங்கா பார்த்தால் எப்படி தமிழ்நாடு பின்னோக்கி செல்லும்? எதாச்சு ஒரு துறையிலாவது தவெக ஆட்சி திமுகவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளதா? எல்லா துறைகளிலும் வீழ்ச்சி பின்னடைவு தான். இதை எதிர்த்துதான் அக்டோபர் 31-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம். இதுதான் தவெகவிற்கு எச்சரிக்கை மணி. இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு முதல் – அமைச்சர் செயல்படணும். மக்களுக்காக தான் இருக்கிறோம். மக்களும் நம்மை நம்பி தான் இருக்கிறாங்க. அதனால் தான் இந்த ஆர்ப்பாட்டம். ஆள தெரியாத ஆட்சிக்கு ஆர்ப்பாட்டத்தில் பாடம் புகட்டுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



















