அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் மூன்று இந்திய வம்சாவளியினர் வெற்றிப்பெற்றுள்ளனர். குறிப்பாக, சுகாஸ் சுப்ரமணியம் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் வர்ஜீனியாவின் 10-வது பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் டேவ் பெக்வித்தை தோற்கடித்தார். சுப்ரமணியம் 63.16 சதவீத வாக்குகளைப் (1,73,106 வாக்குகள்) பெற்றார். டேவ் பெக்வித் 34.66 சதவீத வாக்குகளை (94,990 வாக்குகள்) பெற்றார். வெற்றியையடுத்து சுகாஸ் சுப்ரமணியம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால் உண்மையான பணி இனிதான் தொடங்குகிறது. அமெரிக்காவில் மாற்றத்தைக் கொண்டுவர நமது சமூகத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார். ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்நத பியா தாண்டியா புளோரிடாவின் 22-வது பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்த குடியரசுக் கட்சி வேட்பாளர் கேசி அஸ்கரைத் தோற்கடித்தார். உயர்நிலைப் பள்ளி முதல்வராகப் பணியாற்றிய பியா தண்டியா 51.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவர் புளோரிடாவிலிருந்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கர் ஆவார். மேரிலாந்து துணை கவர்னர் பதவியைத் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவரான அருணா மில்லர் தக்கவைத்துக் கொண்டார். ஆளுனர் வெஸ்மூர் தலைமையிலான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மேரிலாந்து மாகாண துணை ஆளுனராக அருண் மில்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவில் துணை ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசியப் பெண் என்ற பெருமையை 2022-ம் ஆண்டு அருணா மில்லர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



















