கனடா- ‘சக்தி நர்த்தனாலயா’ நடனப் பள்ளி ஆசிரியை ‘நாட்டியக் கலைமணி’ ‘நடன கலா பாரதி’ ஶ்ரீமதி. ஜனனி ரவிசங்கர் அவர்களின் மாணவியும் திரு. திருமதி எட்வேர்ட் அவர்களின் புதல்வியுமாகிய செல்வி ரெனி வித்யா எட்வேர்ட் அவர்களின் நடன அரங்கேற்றம் 07-11-2026 அன்று சனிக்கிழமை AJAX நகரில் ஆடம்பரம் எதுவுமின்றி அழகுற நடைபெற்றது.
78. Church Street South, Ajax என்னும் விலாசத்தில் அமைந்துள்ள AJAX CENTRE FOR ARTS மண்டபத்தில் நடைபெற்ற இவ்வழகிய அரகேற்றத்தில் குரு ஜனனி ரவிசங்கர் அவர்களின் மாணவி செல்வி. ரெனி வித்யா எட்வேர்ட் அவர்களுக்கு ‘அரங்கேற்றச் சான்றிதழ்’ வழங்குவதையும் பக்கவாத்தியக் கலைஞர் மற்றும் அரங்கேற்றத்தை சிறப்புற தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் சாலினி பிள்ளை ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட படத்தையும் இங்கு காணலாம்.



















