அகில இலங்கை உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று *வரலாற்றுச் சாதனை* படைத்த யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களுக்கு புதன்கிழமை 11ம் திகதி அ ன்று (11.11.2026) காலை பெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வரவேற்பு நிகழ்வு, மருதனார்மடம் சந்தியிலிருந்து ஆரம்பமாகி, கே.கே.எஸ். வீதியூடாக கல்லூரி வரை கோலாகலமாக இடம்பெற்றது.

இதன்போது கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களை மலர்மாலை அணிவித்தும், வாழ்த்துகளைத் தெரிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.


















