பு.கஜிந்தன்
தற்போதைய நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் 58வது பிறந்தநாள் 24ம் திகதி செவ்வாய்க்கி;ழமை அன்று கிளிநொச்சி – புன்னைநீராவி கிராம இளைஞர்களால் கேக் வெட்டியும் பட்டாசு கொளுத்தி வீதியால் பயணிப்போருக்கு சிற்றுண்டிகளும் வழங்கி கொண்டாடினர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் தெரிவிக்கையில் தற்போதைய ஆட்சியில் இருக்கும் அதிமேதகு ஜனாதிபதி அனுராகுமார திசாநாயக்க அவர்களின் ஆட்சி தமக்கு பிடித்துள்ளதாகவும் அவரது கொள்கைகள் அவரது சேவைகள் மற்றும் புரிந்துணர்வுகள் மற்றவர்கள் மீது உள்ள இரக்க குணங்கள் நாங்கள் ஏற்றுக் கொண்டமையால் ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலம் நீண்ட ஆயுளுடன் தொடர்ச்சியாக குறித்த ஜனாதிபதியே ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கு ஒத்துழைத்தனர்.















