பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்!
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது 25ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
பின்னர், நிலம் காக்க தம்முயிர்களை வித்தாக்கிய மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அக் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக மாவீரர்கள் பற்றிய புகழுரைகள் இடம்பெற்றது.
















