மொன்றியால் Dollard Des Ormeaux நகர சபையானது தை மாதத்தை ‘தமிழர் மரபுரிமை மாதமாக’ அங்கீகரித்துள்ளது
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பல மாநகர சபைகளும் மாகாண அரசும். அதற்கு மேலாக கனடாவின் மத்திய அரசும் தை மாதத்தை எமது ‘தமிழர் மரபுரிமை மாதமாக’ அங்கீகரித்துள்ள இந்த வேளையில் இந்த வருடத்தில் மொன்றியால் வாழ் பல தமிழ் அன்பர்களின் வேண்டுகோளையும் அவர்களின் அன்பையும் ஏற்று அங்குள்ள Dollard Des Ormeaux நகர சபையானது தை மாதத்தை ‘தமிழர் மரபுரிமை மாதமாக’ அங்கீகரித்துள்ள நற்செய்தியை இங்கு பதிவு செய்வதிலி; மகிழ்ச்சியடைகின்றோம்.
மொன்றியாலிலிருந்து நண்பர் வாகீசன் நடராஜா அவர்கள் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு இந்த நற்செய்தியை தெரிவித்ததன் அடிப்படையில் Dollard Des Ormeaux நகர சபையின் மேயர் அவர்களை கௌரவிக்க தீர்மானிக்கப்பெற்றுள்ளது.
ஏற்கெனவே அவருக்கு மொன்றியால் நகரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்ற இந்த வேளையில் ரொறன்ரோ மாநகரிலிருந்து ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ கனடா கிளை இயக்குனர் சபை உறுப்பினர்கள் இவ்வார இறுதியில் மொன்றியால் நகருக்குச் சென்று அங்குள்ள தமிழ் பேசும் அன்பர்கள் சகிதம் Dollard Des Ormeaux நகர சபையின் மேயர் அவர்களை கௌரவிக்க தீர்மானிக்கப்பெற்றுள்ளது.
பின்வரும் வாசகங்கள் அடங்கிய பாராட்டுக் கேடயம் அன்றைய தினம் Dollard Des Ormeaux நகர சபையின் மேயர் அவர்களுக்கு வழங்கப்பெறும்.
செய்தி;_ சத்தியன்-