இங்கிலாந்தில் இயங்கிவரும் கனடிய தூதரகத்தில் பணியாற்றும்
உயர் அதிகாரியைச் சந்தித்து உரையாடிய. கனடிய வர்த்தகப் பிரமுகர்கள்
இங்கிலாந்தில் இயங்கிவரும் கனடிய தூதரகத்தில் பணியாற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியான Mr. Jason Walsh என்பவரை CANADA HOUSE என்று அழைக்கப்பெறும் உயரிய அலுவலக வளாகத்தில் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பத்தை 3 கனடிய வர்த்தகப் பிரமுகர்கள் பெற்றார்கள் .
அண்மையில் .இங்கிலாந்தில் நடைபெற்ற அனைத்துலக தமிழர்கள் மாநாட்டில் பங்கெடுக்கும் வகையில் இங்கிலாந்து சென்றிருந்த கனடா வாழ் நண்பர்களான கனேடியத் தமிழர் பேரவையின் தலைவரும்,ரொறன்ரோ தமிழ் இருக்கையின் தலைவருமான திரு சிவன் இளங்கோ. கனடாவின் வர்த்தகப் பிரமுகர் திரு சங்கர் நல்லதம்பி அவரது பாரியார் , Nava Wilson LLP – Professional Law Corporation, Toronto நிறுவன பங்காளர் மல்லிகா வில்சன் மற்றும் கனடாவில் நீண்ட காலமாக சூரிய ஒளி மூலம் மின்சக்தியை தயாரிக்கும் வர்த்தகத்தையும் அதற்;கான ஆலோசனைகளை வழங்கி வரும் சேவைகளையும் ஆற்றிவரும் திரு நன்னி பிரதீபன் ஆகியோர். இங்கிலாந்தில் இயங்கிவரும் கனடிய தூதரகத்தில் பணியாற்றும் மேற்படி Trade Commissioner Jayson Walsh என்ற உயர் அதிகாரியைச் சந்தித்து உரையாடி கனடா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையில் உள்ள வர்த்தக உறவுகள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
அப்போது எடுக்கப்பெற்ற படம் இங்கே காணப்படுகின்றது
செய்தி_ ARJUNE -LJI