வாழ்த்துரை
கவிஞன்… கதாசிரியன்…. பேச்சாளன்… பத்திரிக்கையாளன் எனும் ஒரு கலைஞனை “ன்” போட்டு பேசும் போதுதான் அவனது இளமையும் துடிப்பும் எகிறித் தொடர்கின்றன..! இந்தப் பன் முக ஆளுமையாளர் லோகேந்திரன் எனது நீண்ட கால நண்பர் மகேந்திரனின் தம்பி ஆவார்… அடைக்களம் புகுந்த நாட்டில்…. தனது ஆற்றலை பல் துறையிலும் அடையாளப் படுத்தி வருகின்றவர்….
கலை, இலக்கிய, சமூகப் பணிகளில் அரை நூற்றாண்டு காலப் பயணத்தை முடித்திருக்கும் இவர், கனடா உதயன் என்ற தனது பத்திரிக்கையின் 25 ஆண்டு கால வெற்றி விழாவையும் கொண்டாடி…. வெற்றி மலர் ஒன்றையும் வெளியிட்டு சாதனை படைத்தவர்! உதயன் 25 வது ஆண்டு மலர் மிகக் காத்திரமான இலக்கியப் படைப்புக்களைத் தாங்கி… பல்வகை விசயதானங்களை உள்ளடக்கிய கதம்பமாக வெளி வந்திருந்தது.
ஓர் ஊடகவியலாளர் தன் நாட்டின் அரசியல் தலைவர்களின், அரசியல் பிரமுகர்களின் நல்லெண்ணத்தைக் கவர்ந்திருப்பது, அவரது பத்திரிக்கைத் துறை அணுகு முறையை எடுத்துக் காட்டுகின்றது. எழுத்துக் கலைஞர் லோகேந்திரனின் பணி தொடர்ந்து வளர என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்துக்கொள்கின்றேன்!
எழுத்தாளர் மு.சிவலிங்கம்.
– இலங்கை.